ஓட்டு போடறதுக்கு முன் யோசிங்க: பிக்பாஸில் அரசியல் பேசிய கமல்!
- IndiaGlitz, [Sunday,October 11 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவ்வப்போது இடையிடையே மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பேசி வருவது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் முதல்முறையாக போட்டியாளர்கள் முன் தோன்றும் கமல்ஹாசன் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளதாக இன்றைய மூன்றாவது புரோமோ முலம் தெரிய வருகிறது
இன்றைய மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் போட்டிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுபவர்களை ஜனநாயக முறைப்படி நீங்களே தேர்வு செய்யலாம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்
ஷிவானி பெயரை கமல்ஹாசன் சொன்னவுடன் ரம்யா பாண்டியன், ஆரி மற்றும் வேல்முருகன் ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே கையை தூக்கி உள்ளனர். ஆனால் சுரேஷ் பெயரை அவர் கூறியதும் கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், சோம்சேகர், ரியோ மற்றும் சம்யூக்தா ஆகியோர் ஓட்டு போட்டனர்
அப்போது கமல் குறிக்கிட்ட கமல், ‘ஓட்டு போடும்போது யோசித்து போடுங்கள் என்றும், ஓட்டு போட்டுவிட்டு அப்புறம் வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை என்றும் நான் டபுள் மீனிங்கில் பேசுவதாக நினைக்காதீர்கள் என்று கூறி யோசிச்சு ஓட்டு போடுங்க என்றும் அவர் மக்களை பார்த்து கூறுவதாகவும் அந்த காட்சி அமைந்துள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியை என்னதான் அவர் தனது சொந்த அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டாலும் அது எந்த வகையில் அவருக்கு அரசியல் ரீதியில் உதவியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்