ராகுல்காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,April 12 2019]
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளையும் கடுமையாகி தாக்கி பேசிவந்த நிலையில் முதல்முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
திருவாரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன், 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் ஜெயித்த பின் ஒரு இடம் வேண்டாம் என்று சொல்வார். அது எங்கள் அரசியலல்ல. ராகுல் காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம். பின்னர் அவ்ர் எந்த இடம் வேண்டாம் என்று கூறுகிறார் எனப் பார்க்கலாம்” என்று கமல் விமர்சனம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து கமல் பேசியதால் காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்ததால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.