கமல்-சிவகார்த்திகேயன் படத்தில் இணைவது இந்த பிரபல நடிகையா?

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நடந்தபோது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனில் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சிவகார்த்தியன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’என்ஜிகே’ படத்திற்கு பின்னர் சாய்பல்லவி தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற நிலையில் தற்போது கமல்-சிவகார்த்திகேயன் படத்தில் இணை உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாய்பல்லவி நடித்த ‘ஷ்யாம் சிங்காய் ராய்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ரானா டகுபதியுடன் ’விரட்டா பர்வம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.