close
Choose your channels

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்: மாஸ் வீடியோ ரிலீஸ்..!

Friday, May 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணிபுரிய உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் பூஜை குறித்த வீடியோ வெளியாகி உள்ளன.

அதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொள்வதாகவும் கடைசியில் கமல்ஹாசன் வந்து படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பை துவக்கி வைக்கும் காட்சி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment