ரசிகர்களுக்கு இளையராஜா-கமல் தந்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,February 29 2016]

கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்று 'மருதநாயகம்' என்று ஏற்கனவே அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடங்கி வைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உயிர்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் சமீபத்தில் நடந்த இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் கமல்ஹாசனும் இணைந்து பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த பாடலை பாடி முடித்ததும் கைதட்டல் ஓசை நிற்க ஒருசில நிமிடங்கள் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் வரிகள் இதோ உங்களுக்காக:

தாந்ததன்ன தாந்தன்ன தானா - தன
தாந்தன்ன தாந்தன்ன தாந்தன்ன தானா..
பொறந்தது பனையூரு மண்ணு – மருத
நாயகம் என்பது பேர்களில் ஒண்ணு
வளர்ந்தது பகையோட நின்னு – இங்கு
தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒண்ணு
மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது..)

முப்புறம் எரிச்ச செவனே – இங்கு
எப்புறம் போனாலும் எரிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொல்வானே – தக்க
சமயத்தில் காக்கும் ஓர் சாதிசொல்வானா
இடப்பாகம் இருந்த நல்லாளை – கயவர்
இடுகாட்டுச் சோறாக்கி உலரவிட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காணத்தகுமோ
அது காணும் காலம் வருமோ

மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது)

More News

திரைக்கு வருகிறது சென்னையின் பெருவெள்ளம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட சென்னை நகரமே மூழ்கியது என்பதை அனைவரும் அறிவோம்....

தெலுங்கு, இந்திக்கு செல்கிறது தமிழின் கணக்கு

'ஈட்டி' வெற்றியை தொடர்ந்து அதர்வா முரளி நடித்த 'கணிதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது....

ரஜினி, விக்ரம் பாணியில் செல்லும் சூர்யாவின் 'S3'

சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் அவரே 'தோழா' இசை வெளியீட்டில் உறுதிப்படுத்தியுள்ள நிலையில்....

2.0 படப்பிடிப்பிற்காக சென்னை வந்த பிரபலம்

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் ஷங்கரின் பிரமாண்டமான இயகக்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது....

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் வெற்றியுடன் ரீஎண்ட்ரி ஆகியுள்ள சிபிராஜ் அதே உற்சாகத்தில் நடித்து வரும் படம் 'ஜாக்சன் துரை'....