பிரச்சாரம் சென்ற கோவையில் 'தேவர் மகன்' பாணியில் சிலம்பம் சுற்றிய கமல்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் முதல்முறையாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதும் நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை கோவை தெருக்களில் நடை பயிற்சி செய்த கமல்ஹாசன் அதன் பின்னர் அங்கிருந்த சின்னப்ப தேவர் ஹாலில் சிலம்பம் பயிற்சி நடைபெறுவதை பார்த்தார். உடனே அவர் உள்ளே சென்று அங்கு உள்ளவர்களிடம் ஒரு கம்பை வாங்கி சிலம்பு சுற்றினார்.

‘தேவர்மகன்’ பாணியில் அவர் சிலம்பம் சுற்றியதை அங்கிருந்தவர்கள் கண்டு ரசித்து கை தட்டினார்கள். கோவையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அவர் தேவர்மகன் பாணியில் கமல் சிலம்பம் சுற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.