கமல்ஹாசன் சுட்டு கொல்லப்பட வேண்டும்: அகில இந்திய இந்துமகாசபா சர்ச்சை கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் 'இந்து தீவிரவாதம்' குறித்து எழுதிய கட்டுரைக்கு ஏற்கனவே பல கண்டனங்களும், வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என்று இந்து மகாசபா அமைப்பின் துணைத்தலைவர் பண்டிட் அசோக்சர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் மீரட் நகரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மகாசபா அமைப்பின் துணைத்தலைவர் பண்டிட் அசோக்சர்மா இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்து மத மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த புனித மண்ணில் வாழ உரிமையில்லை. அவர்களுடைய கருத்துக்களுக்காக கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இதுவொரு பாடமாக அமையும்.
இந்து மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments