குறும்படம் போட்டு முகத்திரையை கிழித்த கமல்.. வறுத்தெடுக்கப்பட்ட போட்டியாளர் இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுத்திருந்த நிலையில் இந்த டாஸ்க் மூலம் பல போட்டியாளர்களின் உண்மை சுயரூபம் வெளியே வந்தன என்பதை பார்த்தோம்.
குறிப்பாக கடந்த வாரம் அசீம் மற்றும் ஆயிஷா ஆகிய இருவருக்கும் இடையே கடும் மோதல் நடந்த நிலையில் இந்த வாரம் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டே சக போட்டியாளர்களுக்கு சதி செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அசீம் மீண்டும் பெண் போட்டியாளரை வாடி போடி என்று கூறியது, ஷெரினா தற்செயலாக கீழே விழுந்ததை தனலட்சுமி தள்ளி விட்டது போல் நடித்தது, தனலட்சுமியை குறிவைத்து அசீம் அநாகரீகமாக திட்டியது, தனலட்சுமியை தள்ளிவிட்டு பொம்மையை உள்ளே அசீம் வைத்தது உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்தன.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஜனனி மற்றும் ஷிவின் இடையேயும் பிரச்சினை எழுந்தது. இந்த அனைத்து பிரச்சனைகளையும் வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் கட்டமாக இன்றைய நிகழ்ச்சியில் அசீமை கமல்ஹாசன் வறுத்தெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ஆயிஷாவை மரியாதைக்குறைவாக அசீம் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டதால் அவருக்கு அறிவுரை மட்டும் கூறிய கமல், இந்த வாரம் அந்த தவறை மீண்டும் செய்துள்ளதால் அவரை கமல்ஹாசன் வறுத்து எடுத்து உள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து ஷெரினா கீழே விழுந்தது போல் நாடகமாடியதற்கு தனலட்சுமி மேல் குற்றம் சாட்டப்பட்டது. அசீம், மகேஸ்வரி, ஏடிகே உள்பட சிலர் தனலட்சுமி மீது வீண்பழி சுமத்திய நிலையில் அதற்கு ஒரு ஒரு குறும்படமும் போட்டு காண்பித்து தவறு செய்தவர்களின் முகத்திரையை கமல்ஹாசன் கிழித்துள்ளார்.
அதேபோல் ஷிவின் மற்றும் ஜனனி பிரச்சனையை தீர்த்து வைத்ததோடு ஷிவனுக்கு நான் அண்ணன் மாதிரி என்றும் கமல்ஹாசன் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. மொத்தத்தில் இன்றைய எபிசோட் இந்த வார சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout