சென்னையின் டாப் தொழிலதிபர்களுடன் இணைந்த கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

சென்னையின் டாப் தொழிலதிபர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு கமல்ஹாசன் தனது இருப்பிடத்தை மாற்றிக் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தோம் அருகில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பதும், அங்கு அவருக்கு என தனி சமையல் கலைஞர் மற்றும் ஜிம் ஆகியவை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் கமல்ஹாசன் சென்னையின் முக்கிய பகுதியான போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பகுதிகள் பிரபல தொழில் அதிபர்களான கலாநிதி மாறன், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்ரீனிவாசன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட பல தொழிலதிபர்களின் இல்லங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு கமல்ஹாசன் தற்போது தனது இருப்பிடத்தை மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் நடித்து வரும் ’விக்ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது இந்த படத்திற்கு பின்னர் அவர் ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.