'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பூஜை: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தின் இரண்டாவது பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
’இந்தியன் 2’ படம் குறித்த அறிவிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது பூஜை நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் தயாரித்து வந்த ’இந்தியன் 2’ படத்தை தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து இன்றைய பூஜை புகைப்படத்தில் சுபாஷ்கரன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அளிக்கும் ’இந்தியன் 2’ என்ற பெயர் பலகையுடன் பூஜை நடைபெற்று உள்ளது. இந்த பூஜையில் இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அதற்குள் சென்னை திரும்பி விடுவார் என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
We’re all excited!
— Red Giant Movies (@RedGiantMovies_) August 24, 2022
Wishing #Ulaganayagan @ikamalhaasan, @shankarshanmugh sir & the whole team all the luck and love for commencing the shoot of #Indian2 today. ????@LycaProductions @Udhaystalin @RedGiantMovies_ @anirudhofficial pic.twitter.com/rZkfNHs4Ck
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com