'கில்லி' ரீரிலீசை தொட முடியாத 'இந்தியன்'.. 10ல் ஒரு பங்கு தான் வசூல்..!

  • IndiaGlitz, [Sunday,June 09 2024]

விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு தான் நேற்று முன்தினம் வெளியான கமல்ஹாசனின் ’இந்தியன்’ படத்தின் ரீரிலீஸ் வசூல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீப காலமாக பழைய சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் அவற்றில் ’கில்லி’ மட்டுமே வசூல் சாதனை செய்துள்ளது என்பதும் இந்த படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இந்தியன்’ படம் நேற்று முன்தினம் ரீரிலீஸ் ஆகி முதல் நாளில் ஒரு கோடி மட்டுமே ரிலீஸ் வசூல் செய்துள்ளதாகவும் ’கில்லி’ படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு தான் வசூல் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் உட்பட பலர் பழைய சூப்பர் ஹிட் படங்கள் ரிலீசானாலும் கூட ’கில்லி’ படத்தின் வசூலை தொட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கில்லி’ படம் ரீரிலீஸ் ஆகி இன்றுடன் ஐம்பதாவது நாள் ஆகி உள்ள நிலையில் இன்னும் சில திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோடி பதவியேற்பு விழா தினத்தில் கவுண்டமணியின் பதவியேற்பு விழா.. வைரல் போஸ்டர்..!

பிரதமராக மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்க இருக்கும் நிலையில் கவுண்டமணி நடித்த 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

எல்லாமே வதந்தி.. யாரும் நம்பாதீங்க... 'காஞ்சனா 4' குறித்து ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'காஞ்சனா 4' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக சீதாராமன் படத்தில் நடித்த

விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட 250 படங்களுக்கும் மேல் நடித்த நடிகை.. என்ன காரணம்?

தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 250க்கும் அதிகமான படங்களில் நடித்த நடிகை திடீரென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்ஜியின் வருங்கால மனைவி மீடியாவில் இல்லை ஓகே.. என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரது வருங்கால மனைவி மீடியாவில் வேலை பார்ப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் சமீபத்தில் வெங்கட்