'இந்தியன் 2' முதல் நாள் வசூல் எவ்வளவு? 'விக்ரம்' முதல் நாள் வசூலை முறியடித்ததா?

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘இந்தியன் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதாக கூறப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 700 திரையரங்குகளில் வெளியானது என்று கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தின் முன்பதிவு வசூல் மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் முதல் நாள் 55 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனின் முந்தைய படமான ’விக்ரம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 65 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் அதை விட 10 கோடி குறைவாகவே ’இந்தியன் 2’ படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்றும் நாளையும் இந்த படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் காட்சிகளாக அனைத்து திரையரங்களிலும் ஓடி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்று கூறப்படும் நிலையில் போட்ட முதலீடு தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டீசர்..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

தமிழ் திரையுலக ஹீரோவுக்கு திருமணம்.. திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் ஹீரோவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடப்பாவிங்களா.. 'இந்தியன் 2' மீம்ஸ்களுக்கு கதறல் பதில் அளித்த ப்ரியா பவானி சங்கர்..!

கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டர் குறித்து வெளிவந்திருக்கும் மீம்ஸ்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம்.. விஜய் பட தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!

விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்.. சினிமாவில் கூட இப்படி ஆடலையே..!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள்,