என் காதுலயே பூ வைக்குறீங்களா? பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவை வறுத்தெடுத்த காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வாரம் பூர்ணிமா மற்றும் மாயா பேசிக் கொண்டிருந்தபோது ’கமல் சார் என்ன கேட்டாலும் அந்த நேரத்தில் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.

அதை சுட்டி காட்டிய கமல்ஹாசன் ’என்ன வேணும்னாலும் நீங்க சொல்லுவிங்க நான் கேட்டுப்பேனா.. சொல்லுங்க.. ஏ பூ கொண்டு வாங்கப்பா.. யாரு காதுல வைக்கிறதுன்னு நீங்க சொல்லி முடித்ததும் தான் முடிவு பண்ணனும். எங்க காதுல வைக்க முடியாது, ஏன்னா இங்க 3 கோடி பேர் இருக்கோம். அதாவது உங்களுடைய திட்டம் வந்து நான் கேட்கும் போது பொய் சொல்லி சமாளிக்கலாம் என்பதுதான்’ என்று கூறினார்.

அதற்கு பூர்ணிமா ’சமாளிக்கலாம் என்று நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாம் என்று சொன்னேன் சார்’ என்று சொல்ல ’நீங்க இப்ப அதைத்தான் பண்ணிட்டு இருக்கீங்க’ என்று கமல் கூறினார்.

மொத்தத்தில் இன்றைய எபிசோடில் பூர்ணிமாவுக்கு செம திட்டு இருக்கிறது என்பது இந்த புரமோ மூலம் உறுதியாகிறது.

More News

இந்த வாரம் சனி, ஞாயிறு என இரண்டு எவிக்சனா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு எலிமினேஷன் இருக்கும் என்ற நிலையில் இந்த வாரம் மட்டும் திடீரென மிட்வீக் எலிமினேஷன் என அனன்யா வெளியேற்றப்பட்டார்.

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் வேதனை..!

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரால் நிமிர்ந்து உட்கார முடியாத அளவிற்கு அவர் இருந்ததை

ரஜினியை சந்தித்த சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம்.. படம் தயாரிக்க திட்டம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம் ஒருவர் சந்தித்ததாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேஷம் கலைந்தது.. சாயம் வெளுத்தது.. இந்த வாரமும் ரவுண்டு கட்ட போகும் கமல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த வாரம்  தினேஷ், அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார் என்பதும்  அதன் பிறகு அவர்கள் ஓரளவு திருந்தி இருப்பதாக தெரிகிறது

'சியான் 62' படப்பிடிப்பு எப்போது? விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

நடிகர் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார் என்ற