காக்ரோச் மேட்டருக்கு வந்த கமல்ஹாசன்.. வழக்கம்போல் சிரித்து மழுப்பிய மாயா..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா, விஷம தன்மையுடன் விளையாடுவதாக ஆரம்பம் முதலே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எப்பொழுதெல்லாம் கமலஹாசன் அவரை கண்டிக்கிறாரோ அந்த கண்டிப்பு எந்த காரணத்தை முன்னிட்டும் சீரியஸ் ஆக மக்கள் முன் சென்று விடக்கூடாது என்பதற்காக சிரித்து மழுப்பி அந்த விஷயத்தை மாயா மறக்கடித்து விடுவார்.

அந்த வகையில் தான் விக்ரமுக்கு காக்ரோச் என்று மாயா பெயர் வைத்த நிலையில் அது குறித்து கமல்ஹாசன் கேட்டார். அப்போது கூட மாயா சிரித்துக்கொண்டே எந்த விதமான இன்டென்ஷனும் இல்லை சார் அவர் கூறினார்.

இதையடுத்து விக்ரம் இடம், ‘நீங்களும் அதை சிரித்து மழுப்ப வேண்டாம், நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களை நிரந்தரமாக விக்ரம் என்ற காக்ரோச் என்று முத்திரை குத்த விடுவார்கள் என்று கூறினார்

எந்த விதமான தப்பான இன்டென்ஷனுடன் கூறவில்லை என மாயா கூறிய போது ’அப்போ எல்லோருக்கும் பெயர் வைத்திருக்கலாமே’ என்று கமல் கூறினார். இதனை அடுத்து ரவீனா, விஷ்ணு, பூர்ணிமா, நிக்சன் ஆகியார் எழுந்து ’பெயர் வைக்கல சார்’ என்று சொல்ல, ’அப்போ அதுவா வந்துடுச்சா, கமல்ஹாசன் என்ற பெயர் கூட எனக்கு அதுவாக வந்து விட்டதா, கண் முழித்து பார்த்தால் எல்லோரும் என்னை கமல் என்று கூப்பிடுகிறார்கள்’ என்று சொல்ல அரங்கமே அதிரும் வகையில் ஆடியன்ஸ் கைதட்டினர்

மொத்தத்தில் மாயா, பூர்ணிமா, விஷ்ணு, நிக்சன், விக்ரம் ஆகியவர்களை இன்று கமல்ஹாசன் வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.