தயாராக இருங்கள், படப்பிடிப்பை தொடங்குவோம்: 'விக்ரம்' படத்தை பாராட்டிய பிரபலத்திற்கு கமல் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதுடன் அந்த படம் இன்றுடன் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘விக்ரம்’ வெற்றியை தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது என்பதும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு இந்த படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது சமூக வலைத்தளத்தில் ‘விக்ரம்’ படத்தின் கமல்ஹாசன் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்றும் படம் பார்க்கும்போது மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் ’நீங்களும் தயாராக இருங்கள் ரத்தினவேல், விரைவில் நாம் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் ரத்னவேலு தான் கேமராமேனாக பணியாற்றுகிறார். அந்த படத்தை தொடங்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறாரா? அல்லது கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் ரத்னவேலு தான் ஒளிப்பதிவாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thank you @RathnaveluDop. Keep your cylinders filled. We will soon do a movie together as planned. https://t.co/2Wp66qW0Ng
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments