தயாராக இருங்கள், படப்பிடிப்பை தொடங்குவோம்: 'விக்ரம்' படத்தை பாராட்டிய பிரபலத்திற்கு கமல் பதில்!

  • IndiaGlitz, [Sunday,June 05 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதுடன் அந்த படம் இன்றுடன் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ வெற்றியை தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது என்பதும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு இந்த படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது சமூக வலைத்தளத்தில் ‘விக்ரம்’ படத்தின் கமல்ஹாசன் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்றும் படம் பார்க்கும்போது மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் ’நீங்களும் தயாராக இருங்கள் ரத்தினவேல், விரைவில் நாம் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் ரத்னவேலு தான் கேமராமேனாக பணியாற்றுகிறார். அந்த படத்தை தொடங்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறாரா? அல்லது கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் ரத்னவேலு தான் ஒளிப்பதிவாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

குருவை என்னால அழிக்க முடியாது, ஆனா தோற்கடிக்க முடியும்: அரவிந்த்சாமியின் ‘கள்ளபார்ட்’ டீசர்

அரவிந்த்சாமி, ரெஜினா நடித்த ‘கள்ளபார்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஹெச் வினோத் அடுத்த படத்தில் 'விக்ரம்' பட நடிகர் தான் ஹீரோவா?

இயக்குனர் ஹெச் வினோத், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து தற்போது 'ஏகே 61' படத்தை இயக்கி வருகிறார்.

'விக்ரம்' படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகிய முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

'விக்ரம்' படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன சொன்னார்? என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அதை நீங்கள் முழுசா பார்த்திருக்க முடியாது: இடுப்பு டாட்டூ குறித்த கேள்விக்கு ரேஷ்மா பதில்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்த கேள்வி கேட்ட நிலையில் அந்த கேள்விக்கு அவர் பதில் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.