இந்த வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படும் போது பட்டாசு வெடிக்க தடை செய்யப்படுவது பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கமாக உள்ளது. பட்டாசு புகையால் காற்று மாசு படுவதாகவும், ஒலி மாசு ஏற்படுவதாக கூறி பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு வருவதால் பட்டாசு வெடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி அன்று பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தன என்பதும் தமிழகத்தில் ஒருசில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பட்டாசுகள் வெடித்தபின் வீதியில் இருக்கும் வெடித்த பட்டாசுகளின் குழல்களை சேகரித்து அதை செடி வளர்க்க பயன்படுத்தும் ஐடியாவை செய்து வரும் சமூக சேவகர் ஹதீஸ் கான் அவர்களின் செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதனை அடுத்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து தனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின் சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்.