கமல் சொன்ன டைம் டராவல்  கதை: இயக்க போவது இவரா?

  • IndiaGlitz, [Sunday,June 19 2022]

பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் டைம் டிராவல் பற்றிய கதை ஒன்றை தன்னிடம் சொன்னதாக பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த படத்தை அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 400 கோடி என்ற வசூல் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ’விக்ரம்’ பட வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டைம் டிராவல் படமான ‘இன்று நேற்ற் நாளை’ இயக்குனர் ரவிக்குமார் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் ரவிக்குமார் கூறியிருப்பதாவது: நான் வியந்து பார்த்த ஆளுமை அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்’ என்று பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் கூறிய டைம் டிராவல் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

'தளபதி 66' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும்'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? விரைவில் ஹீரோயின் ஆவார்களா?

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை மதுபாலாவின் மகள்கள் தனது தந்தைக்கு வாழ்த்து கூறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபாலா பதிவு செய்துள்ளார். 

ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 எப்போது? செல்வராகவன் பதில்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார். 

'ஆர்.ஆர்.ஆர்' நாயகனுடன் இணையும் வெற்றிமாறன்: வாடிவாசலுக்கு அடுத்து இந்த படம் தான்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்த பிரபல நடிகருடன் வெற்றிமாறன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

நயன்தாராவுடன் ஹனிமூன் எந்த நாட்டில்? விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், ஹனிமூன் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள