டாஸ்மாக்கை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும் அதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டடார். குடித்துவிட்டு தகராறு செய்த சிலரை சப்-இன்ஸ்பெக்டர் பாலு கண்டித்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது கமல்ஹாசனும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குடிநோயாளிகளால் கடமை தவறாத எஸ்.ஐ. பாலு என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும் அதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய மத்திய அரசின் பட்ஜெட்டில் பல அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது சாராயக்கடைகளான டாஸ்மாக்கை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென்ற கமல்ஹாசனின் வேண்டுகோளை அரசு ஏற்குமா?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout