வீட்டில் இருந்தால் மட்டும் தீர்வாகாது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Thursday,March 26 2020]
கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை பொறுமையுடன் கடைப்பிடித்து, வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே கொரோனா வைரஸில் இருந்து தப்பிவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்துள்ளார்.
வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது. @Vijayabaskarofl @CMOTamilNadu
— Kamal Haasan (@ikamalhaasan) March 26, 2020