இனிமேல் இவர்களுக்கும் மாத சம்பளம்: கமல்ஹாசன் உத்தரவாதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் வெள்ளி ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் நேற்று முதல் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் கொடுப்போம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனின் இந்த வாக்குறுதி அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விடுமுறையே இல்லாமல் வருடம் முழுவதும் இரவு பகலாக வீட்டு வேலை செய்துவரும் இல்லத்தரசிகளுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாமல் இருக்கும் நிலையில் அரசே இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் கொடுப்பதாக கமலஹாசன் கூறியிருப்பது பெரும் உற்சாகத்தை அவர்களுக்கு அளித்து உள்ளது
இது நடைமுறைக்கு சாத்தியமா? என்று ஒருபக்கம் இருந்தாலும் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு காரணமாக இல்லத்தரசிகளின் பெரும்பாலான வாக்குகள் அவரது கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com