மறுபடியும் 2 அணிகள்.. விளையாட்டில் நேர்மை இல்லை.. கமல்ஹாசன் அடுக்கடுக்கான விமர்சங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. கிரான்ட் பினாலே நிகழ்ச்சிக்கு தகுதி பெறுபவர்கள் யார் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்பதும் தகுதி பெற்றவர்களில் டைட்டில் வின்னர் யார் என்பதும் தெரிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரான்ட் பினாலே நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் கூட உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக தான் பிரிந்து விளையாடுகிறார்கள் என்றும் தனித்து விளையாட கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள் என்பதையும் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது மாயா, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் ஒரு அணியாகவும் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அர்ச்சனா மட்டும் இரண்டு அணிகளிலும் ஒட்டாமல் அதே நேரத்தில் இரண்டு அணிகளையும் எதிர்த்துக் கொள்ளாமல் தனித்தன்மையுடன் விளையாடி வருவதாக தெரிகிறது.
அதைத்தான் இன்றைய இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய இரண்டாவது புரமோவில், ‘போன வாரம் பெற்றோர்கள், குடும்பத்தார்கள் வந்திருந்தார்கள், அதற்கு முந்தின வாரம் கலை சூழ்ந்திருந்தது. இப்போது அவையெல்லாம் விலகி மறுபடியும் போட்டி மும்முரம் ஆகி உள்ளது.
அதில் நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இரண்டு அணியாக மறுபடியும் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய விளையாட்டில் நேர்மை இருந்திருக்கிறதா? இல்லையா? என்பதை அவர்களிடம் கேட்போம் என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது. இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவது குறித்து கமல்ஹாசன் அடுக்கடுக்கான கேள்விகளை அவர்களிடம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com