மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசை மட்டுமின்றி மாநில அரசையும் பால்கனி அரசுகள் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில் முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்
சமீபத்தில் தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து அரசாணைகள் வெளியிட்டதை கமல்ஹாசன் தனது டுவிட்டில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்
— Kamal Haasan (@ikamalhaasan) April 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com