பிறக்க போகும் பிள்ளைகள் தலையிலும் கடன் சுமை: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,February 14 2020]
தமிழக பட்ஜெட் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த பட்ஜெட்டையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தும், ஆளும் கட்சியினர் பாராட்டியும் வந்தனர். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கருத்து கூறிய உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும்’என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2020
(1/2)