நீங்கள் கேப்டனாக இருக்கவே தகுதி இல்லாதவர்ன்னு அர்த்தம்.. வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியதில் இருந்து இந்த வாரம்தான் கமல்ஹாசன் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் அனைவரையுமே வறுத்தெடுத்தார் என்பதை பார்த்தோம். நேற்று நிக்சன், தினேஷ், மணி, அர்ச்சனா உட்பட பலரையும் கண்டித்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவிலும் கண்டிப்பு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் கேட்க ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முதலாவதாக விஜய் வர்மா ’கேப்டனே இந்த வாரம் இல்லாமல் இருந்தது போல் இருந்தது’ என்று கூறினார்.

இதன் பிறகு ’இது போன்ற ஒரு கேப்டன் இனிமேல் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்’ என்று நிக்சன் கூறினார். கேப்டன் ஸ்ட்ரைக் வாங்குவதற்காக தான் இருந்தார் என விக்ரம் சரவணன் கூறுகிறார்..

இதற்கு பதில் என்ன என்று கமல்ஹாசன் கேட்க அப்போது விஷ்ணு ’நானே நிறைய பேர் கிட்ட பேசுவதில்லை’ என்று கூறுகிறார். ’இந்த குழுவோடு நான் பேச மாட்டேன் அந்த குழுவோடு நான் பேசமாட்டேன் என்று ஒரு கேப்டன் எப்படி சொல்லலாம்? நீங்கள் கேப்டனாக இருக்க தகுதி இல்லாதவர் என்று அர்த்தம், பொறுப்பில்லாதவர்களை ஷாப்பிங் அனுப்புறேன் என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? நியாயமாக நீங்கள் போயிருக்க வேண்டும்’ என்று கமல் கூற விஷ்ணு அமைதியாக தலை குனிந்து நிற்கிறார்.

மொத்தத்தில் கடந்த வார கேப்டன் ஆக இருந்த விஷ்ணுவை கமல்ஹாசன் இன்று வறுத்தெடுக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.