'விஸ்வரூபம்' பிரச்சனையின்போது என்ன நடந்தது? ஈரோடு பரப்புரையில் கமல்ஹாசன் விளக்கம்..!
- IndiaGlitz, [Monday,February 20 2023]
கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் ரிலீசின்போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நான் ’விஸ்வரூபம்’ என்ற படம் எடுத்த போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் அந்த அம்மையார், அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார், உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் நான் இருக்கிறேன் என்று தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் என்னிடம் கூறினார் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆனால் நான், ‘இது ஒன்றும் தேச பிரச்சனை அல்ல, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரிடம் கூறினேன்’ என கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ’விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாகவும் அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் ’விஸ்வரூபம்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது என்பதும் அதன் பின் சில நாட்கள் கழித்து நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு ’விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியானது என்றும் குறிப்பிடத்தக்கது.