ஏராளமான வித்தியாசங்கள்: ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் குறித்து கமல்ஹாசன்!
- IndiaGlitz, [Friday,August 13 2021]
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அரசுப் பணியில் உள்ள மகளிர்களுக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரித்துள்ளது, மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 குறித்த அறிவிப்பு மற்றும் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி பெட்ரோலுக்கான தமிழக அரசு விதித்த வரியை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:
தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2021