close
Choose your channels

'தமிழ்நாடு' குறித்து ஆணித்தரமாக கூறிய கமல்ஹாசன்... அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு வருவாரா?

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சனை ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில் ’தமிழ்நாடு’ என்பதை ஆணித்தரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே நிகழ்ச்சியில் கேள்விகளை கேட்கலாம், அதற்கு நான் பதில் சொல்கிறேன் என கமல் தெரிவித்தார். அப்போது அசல் கோலார், ‘இந்த நிலம் மெட்ராஸ் ஆக இருக்கும்போது நீங்கள் சினிமாவில் நடித்தீர்கள், மக்கள் உங்களை கொண்டாடினார்கள். இப்பொழுது சென்னையாக இருக்கும்போதும் படம் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், இப்பவும் உங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த இரண்டில் உங்களுக்கு எது பிடித்தது? என்று கேட்டார்.

அப்போது அவர் ’நான் கோபத்துக்கு சொல்கிறேன் என்றோ அல்லது போட்டிக்கு சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எனக்கு பிடித்தது தமிழ்நாடு தான். தமிழகம் கூட அல்ல, தமிழ்நாடு தான் பிடித்தது என்பதை ஒத்துக் கொண்டால் மற்ற கேள்விகளுக்கு தானாகவே விடை கிடைத்து விடும் என்று கூறினார்.

இந்த நிலையில் கமலஹாசன் தற்போது தொடர்ச்சியாக பல படங்களை கையில் வைத்திருப்பதாலும், அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் அடுத்த சீசனில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி முடிந்த போது ’மீண்டும் சந்திப்போம்’ என கூறியதை அடுத்து அடுத்த சீசனிலும் அவர் தொகுத்து வழங்குவதை சூசகமாக கூறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment