எஸ்.வி.சேகர் கருத்து குறித்து கமல் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி,.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்த கண்டனங்களால் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அந்த கருத்தையும் தனது முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இருப்பினும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் கருத்து குறித்து நேற்று பேட்டியளித்த ரஜினிகாந்த், 'எஸ்வி சேகர் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்' என்று கூறினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கமல் இன்று கூறியபோது, 'பத்திரிகையாளர் மட்டுமின்றி யார் மீது இதுபோன்ற கருத்து கூறினாலும் அது தவறுதான். அவர்களை தண்டிக்க வேண்டிய முறையில் தண்டிக்க வேண்டியதும், அவர்களுக்கு மரியாதை கற்றுக்கொடுக்க வேண்டியதும் உங்கள் கடமை, எங்களுடைய கடமையும் கூட' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments