நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்: கமல்ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


20 வயதில் நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவர் ஒருவர் ’இளைஞர்களின் தற்கொலை குறித்த உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது ’நானும் 20, 21 வயதில் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன். அந்த காலகட்டத்தில் எனக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் ஏங்கி இருந்தேன். ஆனால் தற்கொலை எப்போதும் தீர்வாகாது என உறுதியாக நம்பினேன்.
இருள் என்பது எப்போதும் நம் வாழ்க்கையில் இருக்காது, நிச்சயம் ஒரு நாள் விடியல் வரும். அந்த விடியல் வரை கஷ்டப்பட்டு உழைத்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.
மேலும் மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் என்றாலும், அதை நீங்கள் தேடி செல்ல வேண்டாம், அது வரும்போது வரட்டும். ஒவ்வொரு நாளும் உறங்க போகும்போது லட்சியத்தை பற்றி கனவு காண வேண்டும், அந்த லட்சியம் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை, அதற்கான அடுத்த கட்டம் என்ன என்பதை எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருங்கள்’ என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
