'நாளை நமதே' வாக்கியம் அவர் தந்தது: எம்ஜிஆர் நினைவு நாளில் கமல் டுவீட்!
- IndiaGlitz, [Thursday,December 24 2020]
உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எம்ஜிஆரின் பெயரை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார் என்பதும் எம்ஜிஆரின் கொள்கைகளை கடைபிடித்து, எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்றும் அவர் கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் பெயரை கமல்ஹாசன் பயன்படுத்தி வருவதற்கும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் முதல்வர் உட்பட அமைச்சர்கள் சிலர் இது குறித்து கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்கள் என்பதும் கமல்ஹாசனும் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதை அடுத்து எம்ஜிஆர் குறித்து கமல்ஹாசன் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: நாற்பதாண்டுகளுக்கு முன்னரே துவங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம்.
நாற்பதாண்டுகளுக்கு முன்னரே துவங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம். #இனி_நாம்
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2020