அழகாக இருந்தால் போதாது, அறிவும் இருக்க வேண்டும்: கீர்த்தி சுரேஷ் குறித்து கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Friday,June 02 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் பேசியதாவது:

’இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் கீர்த்தி சுரேஷ் அழகை பாராட்டினார்கள். அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். ஆனால் அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும். அழகும், அறிவும் சேர்ந்து இருந்தால் அது பேரழகு. அது கீர்த்திக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போதே அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் எனக்கு மாரி செல்வராஜ் இடம் பிடித்தது என்னவென்றால் எதிர் தரப்பு ஒன்றை நிர்ணயித்துக் கொள்ளாமல் எதிர் தரப்புக்கு கூட சமமான இடம் கொடுக்க முயற்சி செய்கிறார். கோபத்தில் அதெல்லாம் தோணாது, ஆனால் உங்களுக்கு அது தோன்றியுள்ளது என்பது சம நிலையை காட்டுகிறது என்று தெரிவித்தார்

நாம் சண்டை போடும்போது நம்ம பக்கம் கோபம் இருந்தால் மட்டும் போதாது, நம்ம பக்கம் நியாயமும் இருக்க வேண்டும். மாரி பக்கம் நியாயமும் இருக்கிறது, அதற்கு வழி அமைத்துக் கொடுத்த உதயநிதிக்கு நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.