கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை உலகில் இருந்தும் தளபதி விஜய், சரத்குமார், உள்பட சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.…
— Kamal Haasan (@ikamalhaasan) June 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout