சிஸ்டம் சரியில்லை என்பவர்களுக்கு வாக்காளர் அட்டையே இல்லை: கமல்ஹாசன்!
- IndiaGlitz, [Friday,November 20 2020]
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை. கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும். மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பல பேரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை.
எந்த விஷயத்தை வேண்டாம் என்று நாம் நினைக்கின்றோமோ, எந்த விஷயம் நமக்கு சம்பந்தம் இல்லை என்று நினைக்கின்றோமோ அந்த விஷயத்தால் தான் நமக்கு ஆபத்து நிச்சயம். நாம் எல்லோருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள ஒரு அடையாளம் வாக்காளர் அடையாள அட்டை.
நவம்பர் 21, 22 அல்லது டிசம்பர் 12 13 ஆகிய தேதிகளில் உங்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களுக்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொள்ளுங்கள். சமீபத்தில் பீகார் தேர்தலில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருவர் தோல்வி அடைந்துள்ளார். முக்கியமாக இல்லத்தரசிகளின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
ஓட்டு போடுவது என்பது யாரோ ஒருவருக்காக இல்லை. நீங்கள் ஓட்டு போடுவது உங்களுக்காகத்தான். உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிப்பதால் தான் உங்கள் ஓட்டு உங்களுக்கு முக்கியமானது.
அதனால் 2021 தேர்தலில் நீங்கள் மனதுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டிய தாரகமந்திரம் ஓட்டு போட வேண்டும் என்பது தான். ஆட்சி மாற்றம் என்பது வெறும் அரசியல் மாற்றமோ, அதிகார மாற்றமோ, அல்லது நிர்வாக மாற்றமோ அல்ல, எல்லோரும் முடிவெடுக்கிற அன்று எல்லோரும் கூடினால் அதுவே மிகப்பெரிய சமூக மாற்றம்’ என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்#iWillCHANGE_iWillVOTE#என்ஓட்டு_என்பெருமை pic.twitter.com/xvggdOfl6V
— Kamal Haasan (@ikamalhaasan) November 20, 2020