close
Choose your channels

என்னுடைய சொத்துமதிப்பு ரூ.200 கோடியை தாண்டி வேற லெவலில் போயிருக்கும். ஆனால்... கமல்ஹாசன்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியலில் பல ஆண்டுகாலம் இருந்து முக்கிய பதவிகள் வகித்தவர் கூட தங்களுடைய சொத்து மதிப்பு 20 கோடி முதல் 30 கோடி வரை தான் காட்டி இருக்கும் நிலையில் முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கி, முதன் முதலாக தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் தன்னுடைய சொத்து மதிப்பை 176 கோடி என தைரியமாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் கமல்ஹாசன் கூறியபோது ’நான் என்னுடைய சொத்து மதிப்பை உண்மையாகவே கூறியுள்ளேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது. மற்றவர்களுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் நான் இந்த சொத்து முழுவதையும் என்னுடைய உழைப்பில் சம்பாதித்தேன். அத்தனையும் வரி கட்டி சம்பாதித்த பணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எனக்கு விஸ்வரூபம் திரைப்படத்தின் போது பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்னுடைய சொத்து மதிப்பு 200 கோடியைத் தாண்டி எங்கோ சென்றிருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் அதற்கு பழிவாங்க வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை. என்னைப்போல் இந்த ஆட்சியில் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன்’ என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment