எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வார எவிக்சன் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் மூவரில் ஒருவர் வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மணி, ஜோவிகா மற்றும் விக்ரம்.

இந்த நிலையில் இவர்களில் யார் வெளியே போவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல்ஹாசன் சக போட்டியாளர்களிடம் கேட்டபோது விக்ரம் போவார் என்று தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் கூறுகின்றனர். விஜய் வர்மா மற்றும் மாயா ஆகிய இருவரும் ஜோவிகா போக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கூல் சுரேஷ் எழுந்து ’நாங்கள் ஒரு பெயர் வைத்திருப்பதை விட நீங்கள் ஒரு பெயர் வைத்திருப்பீர்கள்’ என்று சொல்ல உடனே கமல்ஹாசன் ’எவிக்சன் விவகாரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கூறிவிட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த அட்டையை காண்பிப்பதுடன் ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது

இந்த நிலையில் இந்த வாரம் ஜோவிகா வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.