பதவியில் இருக்கும் ஆசை, பொறுப்பை செய்வதில் இல்லை: கமல்ஹாசன் சொல்வது யாரை?

பதவியை ஏற்க வேண்டும் என்று இருக்கும் ஆசை அந்த பதவிக்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை என உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது 6வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வருவது மட்டுமின்றி அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் புகுத்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ‘உப்பு நாட்டையும் மாற்றியுள்ளது, வீட்டையும் மாற்றியுள்ளது. பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நான் என்ன பேசுவேன் வார கடைசியில் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு, தான் என்ன பேச வேண்டும் என்பதை யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களிடமே பேசுவோம் என்று கூறுகிறார்.

கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் தவறு செய்யும் போட்டியாளர்களை வறுத்தெடுத்து வரும் கமல்ஹாசன், இந்த வாரம் யாரை வறுத்து எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.