close
Choose your channels

80s நடிகைகளுடண் 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்.. யார் யார் தெரியுமா?

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

80s நடிகைகளுடன் உலகநாயகன் கமலஹாசன் ‘பதான்’ திரைப்படத்தை பார்த்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதால் பாலிவுட் திரையுலகிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் ‘பதான்’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும், குறிப்பாக கமலஹாசன் ‘பதான்’ திரைப்படம் ரிலீஸ் ஆன தினத்தில் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பதான்’ திரைப்படத்தை சமீபத்தில் கமலஹாசன் பார்த்து உள்ளார். அவருடன் அவருடைய அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி, 80s நடிகைகளான ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ‘பதான்’ படத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment