ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் கமல்? திரையுலகினர் ஆச்சரியம்..!
- IndiaGlitz, [Friday,April 26 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தோன்றுவதாகவும் அதற்காக அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவதை அடுத்து ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமா? என்று திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டு வருடங்களாக அவர் நடித்த எந்த படமும் வெளியாகாமல் இருந்தாலும் இந்த ஆண்டு அவர் நடிக்கும் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக ’இந்தியன் 2’ அதனை அடுத்து ’கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து வரும் படங்களில் ஒன்றான ’கல்கி 2898 ஏடி’படத்தில் அவரது கேரக்டர் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே வருவதாகவும் இதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பள குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் திரை உலகில் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘நடிகையர் திலகம்’ உட்பட சில படங்களை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என கூறப்படுகிறது.