கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Thursday,January 25 2018]
சமீபத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உட்கார்ந்திருந்த காஞ்சி விஜயேந்திரர், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
இந்த விவகாரம் நேற்று முதல் தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. விஜயேந்திரர் தமிழ்த்தாய் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றும், சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும் என்றும் தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எனது கடமை' என்றும் கமல் கூறியுள்ளார்.
மேலும் ஆன்மிக அரசியல் சாத்தியப்படுமா என எனக்கு தெரியவில்லை என்று கூறிய கமல் மக்கள் நலன்தான் முக்கியம் என்றும் கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.