இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து!

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து கூறியபோது, 'ஒரு இந்தியனாக அவரவர் மொழியை மதிக்க வேண்டும் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். எந்த மொழியையும் திணிக்க கூடாது என்பது என் கருத்து. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்

தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அது அச்சமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தேகமாக மட்டும் இருந்தால் போதும். இனிவரும் ஐந்து வருடத்தில் மோடியின் ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனாக என்னுடைய ஆசை' என்று தெரிவித்தார்.