குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களை தூக்கில் போட்டாலும் பயனில்லை: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,June 28 2019]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகி வருகிறது. இன்று கூட 4வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது நபர் ஒருவர் குறித்த செய்தி வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தைகள் என்றாலே அந்த பிஞ்சு முகம், கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு, மழலையை ரசிக்கும் காலம் போய் தற்போது குழந்தைகளையும் பாலியல் செய்யும் கொடூரம் அதிகமாகி வருவது சமூகத்தின் சீரழிவை காட்டுகிறது
இந்த நிலையில் சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் 10 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட மழை நீரை சேகரிப்பது சிறந்தது என்றும், முறையாக மழை நீரைச் சேமித்து வைத்திருந்தால் மக்கள் தண்ணீருக்காக வீதியில் இறங்கி வர தேவையில்லை என்றும் கமல்ஹாசன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.