ரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:

  • IndiaGlitz, [Tuesday,November 19 2019]

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும், அந்த வகையில் ‘கமல்ஹாசன் 60’ விழாவில் ரஜினிகாந்த் கூறிய அதிசயம்-அற்புதம் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியையும் ஊடகங்களுக்கு தீனியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுவரை ரஜினியை அதிமுகவின் மறைமுக ஆதரவாளர் என்று கூறப்பட்ட முத்திரையும் உடைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசிய அதிசயம் குறித்து இன்று டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசன் கூறியதாவது:

ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கூறினார்

மேலும் இலங்கையில் புதியதாக பதவியேற்றுள்ள கோத்தபய குறித்த கேள்விக்கு ‘நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை’ என்று தெரிவித்தார்.

More News

வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும்

காதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்!

ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காதல் தோல்வியால் மனம் உடைந்து பாகிஸ்தானுக்கு தெரியாமல் சென்று சிக்கிக் கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை

தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக ரயிலில் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு இளம்பெண் தினமும் வேலூரிலிருந்து சென்னைக்கு திருடுவதற்காக வந்துள்ளார்

சிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை

ஒடிஷாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனிடம் வழங்கினார் 

பழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்!

சமீபத்தில் கமல்ஹாசன் 60'விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசிய சில கருத்துக்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள்