ரஜினியின் தபால் வாக்கு குறித்து கமல் கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தபால் வாக்கு படிவம் சரியான நேரத்தில் கிடைக்காததால் மும்பையில் இருக்கும் நடிகர் ரஜினி, தனது வாக்கை பதிவு செய்ய முடியவில்லை என்று தனது டுவிட்டர் மூலம் கூறியதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ரஜினியை போல் பல நடிகர்கள், நாடக நடிகர்களும் தபால் ஓட்டு கிடைக்காததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தபால் ஓட்டு கிடைக்காத சிலர் நேரில் வாக்களிக்க வந்தபோதும், அவர்களை தேர்தல் அதிகாரி வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த கமல்ஹாசன், தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரஜினி வாக்களிக்க முடியாத நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல், 'தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றும், இதில் சதி இருப்பதாக யாரும் கருத வேண்டாம் என்றும், இது தபால் துறையின் தவறு அல்லது பிழையாக இருக்கலாம் என்றும், அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது இருக்கக்கூடாது என்பதே என்னுடைய கருத்து என்று கூறிய கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை இருப்பினும் பெரும்பான்மையர் ஆதரவு கொடுத்தால் மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout