சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்றலாம்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தில் 7% ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடைக்கும்போது, 28% ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் இல்லை என்ற வசனம் கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், இன்னொரு விஷயத்திலும் சிங்கபூரை பின்பற்றலாம் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூரில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. நமது நாட்டின் டிடி தொலைக்காட்சியிலும் அதேபோல் செய்யலாம். எனது நாட்டுப்பற்றை நிரூபிக்கவோ, பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்' என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். 

மேலும் சில விஷயங்களில் சிங்கப்பூரை போல் சர்வாதிகாரமாக இருப்பதே சிறந்ததாக இருக்கும் என்று விரும்புகிறீர்களா? வேண்டாமே' என்று பதிவு செய்துள்ளார்.

More News

நடிகை அசினுக்கு கிடைத்த பெருமைக்குரிய புரமோஷன்

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அசின் திருமணத்திற்கு பின் நடிப்புலகில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்ட அசினுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

வேலைக்காரன்' படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கருத்தவனெல்லாம் கஜிலாம்'

விஜய் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பார்: கோவை சரளா

தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சிறு வேடமாக இருந்தாலும் சிறப்பான வேடத்தில் நடித்தவர் கோவை சரளா.

'மெர்சல்' உதவியால் ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைத்த தினகரன் ஆதரவாளர்

தளபதி விஜய்யின் 'மெர்சல் திரைப்படம் தான் கடந்த ஐந்து நாட்களாக இந்தியாவின் தேசிய செய்தியாக இருந்து வருகிறது. கமல், ரஜினியை அடுத்து மெர்சல் மூலம் விஜய்யும் இந்திய அளவிலான ஸ்டாராக மாறிவிட்டார்.

ஆடு, மாடு, நாய் வளர்த்தால் வரி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து உத்தரவு

இந்தியாவில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, வாட் வரி,என மக்களை வரிகளால் உறிஞ்சி எடுத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் தற்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும் வரி கட்ட வேண்டும்