சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்றலாம்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தில் 7% ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடைக்கும்போது, 28% ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் இல்லை என்ற வசனம் கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், இன்னொரு விஷயத்திலும் சிங்கபூரை பின்பற்றலாம் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூரில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. நமது நாட்டின் டிடி தொலைக்காட்சியிலும் அதேபோல் செய்யலாம். எனது நாட்டுப்பற்றை நிரூபிக்கவோ, பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்' என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
மேலும் சில விஷயங்களில் சிங்கப்பூரை போல் சர்வாதிகாரமாக இருப்பதே சிறந்ததாக இருக்கும் என்று விரும்புகிறீர்களா? வேண்டாமே' என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com