எம்ஜிஆர் இருந்திருந்து கலைஞர் இறந்திருந்தால்? கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மறைந்த சோகம் திமுக தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு மெரினாவில் இடமில்லை என்ற தமிழக அரசின் முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஐந்து முறை முதல்வராகவும், 16 முறை எம்.எல்.ஏவாகவும், அரை நூற்றாண்டுக்கும் மேல் அரசியலில் இருந்த முதுபெரும் தலைவருக்கு மெரினாவில் இடமில்லை என்பதை திமுக தொண்டர்கள்களால் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளதாவது:
அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்ஜிஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார். இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout