கலியுக வரதன் வந்துவிட்டார், கல்கி அவதாரம் வந்துவிட்டது: கமல் குறிப்பிடுவது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக தற்காலிகமாக டுவிட்டர் அரசியலுக்கு இடைவெளி கொடுத்துள்ளார். இருப்பினும் வார இதழ் ஒன்றுக்கு அவர் எழுதி வரும் தொடர் மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் முடிவடைந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்ற தினகரன் பதவியேற்றுவிட்ட நிலையில், தினகரன் குறித்து கமல் அந்த தொடரில் எழுதியபோது, ''என்ன நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பாராட்டுகிறார்கள். இப்படி, ஆகப்பெரிய அவமானம் எப்படி கொண்டாட்டமாக மாறுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன். "என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் 'அடடா ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது. இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது' என்று பாராட்டுகிறார்கள்" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்தால் இனிமேல் அதிமுகவினர் மட்டுமின்றி தினகரன் ஆதரவாளர்களும் அவரை விமர்சிக்க தயாராகிவிடுவார்கள் என்றும், அதற்கு கமல்ஹாசனும் பதிலடி கொடுப்பார் என்பதால் தமிழக அரசியல் இனி விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout