கலியுக வரதன் வந்துவிட்டார், கல்கி அவதாரம் வந்துவிட்டது: கமல் குறிப்பிடுவது யாரை?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் பணி காரணமாக தற்காலிகமாக டுவிட்டர் அரசியலுக்கு இடைவெளி கொடுத்துள்ளார். இருப்பினும் வார இதழ் ஒன்றுக்கு அவர் எழுதி வரும் தொடர் மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் முடிவடைந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்ற தினகரன் பதவியேற்றுவிட்ட நிலையில், தினகரன் குறித்து கமல் அந்த தொடரில் எழுதியபோது, ''என்ன நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பாராட்டுகிறார்கள். இப்படி, ஆகப்பெரிய அவமானம் எப்படி கொண்டாட்டமாக மாறுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன். என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் 'அடடா ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது. இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது' என்று பாராட்டுகிறார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்தால் இனிமேல் அதிமுகவினர் மட்டுமின்றி தினகரன் ஆதரவாளர்களும் அவரை விமர்சிக்க தயாராகிவிடுவார்கள் என்றும், அதற்கு கமல்ஹாசனும் பதிலடி கொடுப்பார் என்பதால் தமிழக அரசியல் இனி விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கணவர் படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சைந்தவி

ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவியும் கர்நாடக சங்கீத பாடகியுமான "சைந்தவி" இன்று தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்;

'தளபதி 62' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணையும் நாயகி

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' திரைப்படத்தின் போட்டோசெஷன் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி கட்சிக்கு 24 மணி நேரத்தில் 50 லட்சம் ரிஜிஸ்ட்ரேசன் சாத்தியமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதோடு அதற்கு மறுநாள் இணையதளம் மற்றும் செயலி ஆரம்பித்து அதில் மன்ற உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்

டிரம்ப் தரும் பத்திரிகையாளர் விருது நம்மூருக்கு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர்களில் கடந்த ஆண்டு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முற்றிலும் வேறுபட்டவராக உள்ளார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வருகிறது

யாருடைய பட்டனால் உலகம் அழியப்போவுது? அச்சத்தில் பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளூம் அபாயம் உள்ளது.