நல்ல சோறு போட்டவர்களுக்கு புழுத்து போன அரிசியா? கமல் காட்டம்

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட நடிகர், அரசியல்வாதி கமல் நேற்று இரண்டாம் முறையாக டெல்டா பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். இந்த முறை யாரும் போகாத கிராமப்பகுதிகளுக்கு சென்ற அவர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நிலைமை குறித்து அங்கு வாழும் மக்களின் துயரங்கள் குறித்தும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

'நீங்க அடுத்த சி.எம்-க்கு வண்டி ஓட்றீங்க: கமல் சென்ற பேருந்தில் கலகல...

மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாவது முறையாக டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்

அஜித்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்: போலீசார் தடியடியால் பரபரப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் 'தக்சா' என்ற அமைப்பு ஆளில்லா விமானம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது என்பதும் இந்த அமைப்புக்கு தல அஜித் ஆலோசகராகவும் உள்ளார்

'இந்தியன் 2' நாயகியாகும் அஜித்-விஜய் பட நடிகை

ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'என்.ஜி.கே' குறித்த புதிய அப்டேட்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் புதிய அப்டேட் கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் படக்குழுவினர்களுக்கு பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

2.0 புயலிலும் வீழாமல் இருக்கும் 'காற்றின் மொழி'

பொதுவாக ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகும்போது அதற்கு முன்னர் வெளியான படங்களை வாரிசுருட்டி கொண்டு போய்விடும்